fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

ஹெல்த்தியான மூங்கில் அரிசி பாயாசம்!!

மூங்கில் அரிசியானது அதிக அளவிலான மருத்துவ குணங்களைக் கொண்டது, அதாவது ஒரு கப் அளவு அரிசியில் மட்டும் 160 கலோரி அளவு நிறைந்துள்ளது. அத்தகைய மூங்கில் அரிசியில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஹெல்த்தியான மூங்கில் அரிசி பாயாசம்!!

ஹெல்த்தியான மூங்கில் அரிசி பாயாசம்!!- Healthy bamboo rice Payasam!!

ஹெல்த்தியான மூங்கில் அரிசி பாயாசம்!! ஹெல்த்தியான மூங்கில் அரிசி பாயாசம்!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • மூங்கில் அரிசி – 1/4 கப்,
  • பால் - 4 கப்,
  • வெல்லத்தூள் – 1/2 கப்,
  • தேங்காய்த் துருவல் – 1/2 கப்,
  • நெய் - 2 டீஸ்பூன்,
  • உலர் திராட்சை- தேவையான அளவு,
  • முந்திரி. - தேவையான அளவு
  • ஏலக்காய்த்தூள்- சிறிதளவு

Instructions

  1. மூங்கில் அரிசியை கழுவி நன்கு ஊறவைக்கவும்.
  2. அடுத்து அதனை தண்ணீர் ஊற்றி நன்கு அலசிக் கொள்ளவும்.
  3. அடுத்து, மிக்சியில் போட்டு தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. அடுத்து பாலை சுண்டக்காய்ச்சி அரிசி மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
  5. அடுத்து வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  6. அடுத்து வேகவைத்த மூங்கில் அரிசி மாவுடன், பால், வெல்லத்தூள், தேங்காய்த் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கினால் மூங்கில் அரிசி பாயாசம் ரெடி.

 

Related posts

கேழ்வரகு வாழைப்பழ அடை

N N

குளுகுளு கேரட் மில்க் ஷேக்!!

N N

கொழுப்பை கரைக்கும் குதிரைவாலி கொள்ளு கஞ்சி

N N