தமிழத்தின் 80 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீ தேவி கடந்த வருடம் பிப்ரவரி 24 இல் மறைந்தார். தனது உறவினரின் திருமண விழாவிற்கு தன் இளையமகள் குஷி கபூருடன் சென்ற அவர் திருமணம் முடிந்ததும் ஹோட்டலில் தங்கினார். அப்போது திடீரென மர்மமாக இறந்து போனார்.
அந்தத் துயரச்சம்பவம் இந்தியாவையே துக்கத்தில் ஆழ்த்தியது அதிலும் குறிப்பாக தமிழ் ரசிகர்களிடையே கவலை புரண்டோடியது. அவர் மறைந்து ஒரு வருடம் ஆனதை ஒட்டி அவரது நினைவு தினம் மும்பையில் நடந்தது. அவரது மகள் ஜான்வி உருகி அழுத வீடியோக்கள் வலைதளங்களை பரபரப்பாக்கின.

இந்நிலையில் ஸ்ரீ தேவியின் கணவர் போனிக்கபூர் அவரது சேலையை இணையத்தில் ஏலம் விட்டார். அதில் அவரின் புடவை 1.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது, ஆனால் அதன் ஆரம்ப விலையாக நாற்பது ஆயிரம் தான். ஏலத்தில் கிடைத்த தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு தரப்போவதாக கணவர் போனிக்கபூர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்