fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஸ்டேண்ட்-அப் காமெடியன் டூ மாஸ் ஹீரோ

    2012 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ’மெரினா’ படத்தில் சிவகார்த்திகேயன் அறிமுகம் ஆனார். ஆனால் அப்படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை. ஆனால் 2019 இல் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஸ்டேண்ட்-அப் காமெடியன் டூ மாஸ் ஆன சிவகார்த்திகேயனின் பயணத்தைச் சற்று திரும்பி பார்ப்போம்.

திருச்சியைச் சேர்ந்த சிவகார்த்திகேயன் ஒரு பொறியியல் பட்டதாரி. திருச்சியிலிருந்து மணப்பாறைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஜெ ஜெ பொறியியல் கல்லூரியில் இவர் படித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ”கலக்கப் போவது யாரு” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவரது வெற்றிப் பயணத்தின் தொடக்கம் இதுதான். ’மெரினா’ படத்திற்காக இயக்குநர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனை அணுகினார். அதில் ஓவியாவின் காதலராக நடித்திருந்தார். அதன் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான “3” படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார்.

ஸ்டேண்ட்-அப் காமெடியன் டூ மாஸ் ஹீரோ

இதில் தனுஷும், சிவகார்த்திகேயனும் செய்யும் நகைச்சுவை சேட்டைகள் அனைவரையும் கவர்ந்தன.  இதையடுத்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருப்பினும் தனுஷ் தயாரிப்பில் உருவான “எதிர் நீச்சல்” படத்தில் தமிழ் சினிமாவின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

 பொன்ராம் இயக்கத்தில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் கிராமத்து நாயகனாக நடித்திருந்தார். “மான் கராத்தே” திரைப்பட வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உருமாறினார். காக்கி சட்டை, ரஜினி முருகன் ஆகிய படங்களின் சுமாரான வெற்றிக்கு பின், ”ரெமோ” படத்தில் நடித்தார்.

இப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. இதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டார். சமீபத்தில் கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தன்னுடைய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய “கனா” படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

     எம்.ராஜேஷ் இயக்கும் “மிஸ்டர் லோக்கல்” என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ உடன் காதல் வசப்படும் நாயகனாக நடித்துள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரெட்ரோ லுக்கில் அசத்தலான புகைப்படம் வெளியிட்ட வரலட்சுமி !

TamilTwin India

ராதிகா ஆப்தேவை கிண்டலடித்த ரசிகர்கள்!!

N N

பாஸ்ட் & ப்யூரியஸ் பாணியில் உருவாகும் இந்தியன் 2, தலைவலியில் நிற்கும் லைக்கா

TamilTwin India