fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக வேண்டும் என்று தான் ஆசை ஆனால் நடிகை ஆகிவிட்டேன்

     வாமணன் படத்தில் நடிகர் ஜெய் ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியா ஆனந்த்.  வாமணன் படத்தினைத் தொடர்ந்து எதிர் நீச்சல், அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்தார்.  சில ஆண்டுகள் படங்கள் இல்லாத நிலையில் இருந்தார்.  ஆனால் தற்போது அவர் நடித்து திரை அரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கின்ற படம்  எல். கே. ஜி.  இப்படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து இருக்கிறது.  இதனை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். 

ஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக வேண்டும் என்று தான் எனக்கு ஆசை ஆனால் நடிகை ஆகி விட்டேன்

     பிரியா ஆனந்த் அளித்த பேட்டி ஒன்றில் “நான் வெளிநாட்டில் வளர்ந்தவள் ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்”.  சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இங்கு வரவில்லை, ஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்டாக சேர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இங்கு வந்தேன்.  அவருக்கு டீ, காபி கொடுக்கும் வேலை கிடைத்தால் கூட போதும் என்ற தவிப்புடன் இருந்தேன்.  ஷங்கர் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.  நான் இப்பொழுது ஐந்து மொழிகளில் நடித்து வருகிறேன்.   

Related posts

மலாலா வாழ்க்கை படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

TamilTwin India

கரோனாவை விட ஆபத்தானவர்கள் மனிதர்கள், கடுப்பான பிரபல நடிகர் !

TamilTwin India

‘திருராக்கியார்’ பேமஸ் ஆகும் கே ஜி எஃப் ஃபின் திருக்குறள் வெர்ஷன்

N N