ஒரு குறிப்பிட்ட படிப்பை முடித்து, படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை தேடுவது என்பது அவ்ளோ எளிதல்ல. ஒரு வேலையை தேடி செல்லும் போது, அந்த வரிசையில் ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் அங்கு நிற்பார்கள். இவை அனைத்தையும் தாண்டி ஒரு வேலையில் அமர்வது சும்மா சின்ன விஷயம் கிடையாது.
இன்றைய விஞ்ஞான உலகில் வேலை கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. இப்படி இருக்கும் போது மலேஷியாவை சேர்த்த இந்த இளைஞர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
வேலை தேடி ஒரு தளத்திற்கு சென்றால், ஏராளமான போட்டிகள் அங்கு இருக்கும். லிங்க்டின் ( Linkedln ) தளத்தில் வேலை தேடி பதிவிட்ட இளைஞன் அஸ்ரில் ஹக்கீம் என்ற மலேஷியா சேர்த்தவர், எல்லோரும் செல்லும் பாதையில் செல்லாமல், வித்தியாசமாக முயற்சித்து இருந்தார்.
ஒரு காலி நாற்கலி படத்தை போட்டு, என்னை வேலையில் எடுக்க ஆல் தேவை என்று போடப்பட்டு இருந்தது. தன்னுடைய வேலையின் முன் அனுபவம், தன் திறமையை பதிவிட்டு, என்னுடைய cv யாருக்கு வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
அதாவது நான்கு வருடம் அவர் செய்து வந்த பணிகள், அவற்றை கூறிய பின் தனக்கு தெரிந்த விஷயத்தை கூறி இருந்தார்.வேடிக்கையாக இருந்தாலும், அனைவரின் கவனமும் திரும்பியதன் விளைவாக மிக சீக்கிரம் அதிகமான லைக்ஸ் கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளது.
இன்னும் பலர், இந்த முயற்சியை பாராட்டி தன்னை இன்டெர்வியூ எடுக்கிறோம். சி.வீ யை (CV) தாருங்கள் என்றும் கேட்டு இருக்கிறார்கள்.
எப்போதும் கூட்டத்தில் ஒருவனாக இருக்காமல், தனி வழியை தேடும் போது நல்ல மதிப்பும், பலனும் கிடைக்கும் என்று நிரூபித்து விட்டார் ஹக்கீம்.
பாராட்டுகள் குவிந்து கொண்டே இருக்கிறது.