fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் ஆன்மிகம் இலங்கைச் செய்திகள் செய்திகள்

வெளியானது ‘நல்லைக்குமரன் மலர்’: ஓர் சிறப்புப் பார்வை (Video, Photos)

நல்லைக் குமரன் மலர்-28 இன் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை(31) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

சைவசமய விவகாரக் குழுவின் தலைவரும், யாழ்.மாநகர சபையின் ஆணையாளருமான இ. த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் யாழ்.மாநகரசபையின் பதில் முதல்வர் து. ஈசன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ். சிவலிங்கராசா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோர் ஆசியுரைகள் கலந்து கொண்டு ஆசியுரைகள் நிகழ்த்தினர்.

நல்லைக்குமரன் மலரினை யாழ். மாநகரசபையின் ஆணையாளர் இ. த. ஜெயசீலன் வெளியீடு செய்து வைக்க முதற்பிரதியை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பிரதிநிதி இ. இராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து விழாவில் ஆசியுரை ஆற்ற வந்த சமயத் தலைவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மலரின் ஆய்வுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நூலுக்கான ஆக்கங்களை வழங்கியவர்களுக்கான சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. விருந்தினர் உரைகளும் இடம்பெற்றன.

மேற்படி விழாவில் சமயத் தலைவர்கள், விருந்தினர்களுடன் வாழ்நாட் பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திருமதி- நாச்சியார் செல்வநாயகம், மூத்த ஆன்மீகவாதி இராசையா ஸ்ரீதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் இந்துநாகரீகத் துறைத் தலைவர் மா.வேதநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி- கந்தையா ஸ்ரீகணேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எஸ். முகுந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறை விரிவுரையாளர்களான தி. செல்வமனோகரன், தற்போது விடுமுறையிலுள்ள யாழ்.மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட், யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், பல்துறைசார்ந்தோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கொரோனாரத் தொற்றுக் காரணமாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் முகக் கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளி பேணியும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வருடா வருடம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக் குமரன் மலரின் இந்த வருடத்துக்கான இதழ் 80 பக்கங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.

நல்லைக் குமரன் முன் அட்டைப் படம் நல்லைக் கந்தனின் அழகிய முகப்பையும், இவ்வருட கொடியேற்ற உற்சவம் மற்றும் வீதி உலாப் படங்களையும் தாங்கி வெளியாகியுள்ளது.

மலரின் பின் அட்டைப் படத்தில் தவத்திரு நல்லூர் சடையம்மா சுவாமிகளின் உருவப் படத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது.

மேற்படி மலரில் பல்வேறு பயனுள்ள கட்டுரைகளும், கவிதைகளும், நல்லை ஆதீன குரு முதல்வர், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் மற்றும் சமய நிறுவனங்களின் தலைவர்களின் ஆசிச் செய்திகளும், யாழ். மாநகர முதல்வர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டோரின் வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி, படங்கள்:- செ. ரவிசாந்}

Related posts

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும்! தெளிவுபடுத்திய மஹிந்த தேசப்பிரிய

World News

ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி

World News

பாடசாலைகள் மே 11 ஆரம்பம்

World News