fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » விழித்துக் கொண்டது பேஸ் புக்!
தொழில் நுட்பம்

விழித்துக் கொண்டது பேஸ் புக்!

சமூக வலைத்தளங்களில் அரசன் ஆக திகழும் பேஸ் புக் வெறும் பொழுது போக்கும் அம்சங்கள் மட்டும் நிறைந்தவை அல்ல. மேலும், சமூகத்தின் முக்கிய தொலை தொடர்பு  கருவியாக உருவாகி உள்ளது.எந்த ஒரு செய்தியும் மின்னல் பொழுதில் பரவபடுகிறது.இதனால் மக்களிடம் எளிதில் செய்திகள் சென்று சேர உதவியாக இருக்கிறது.

Facebook

ஆனால், இதன்  மறு பக்கத்தை காணும் போது கவலை அளிக்கிறது. வதந்திகளும் பொய்கள் வேகமாக பரவ படுகிறது. இப்போது இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால், பொய்கள் மக்களிடம் பிறவுவதை தடுக்க பட வேண்டும் என்று மத்திய அரசு பேஸ் புக்யிடம் கோரிக்கை வைத்தது.

சமீபத்தில் கூட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கார் விபத்தில் உயிர் இழந்து விட்டார் என்ற பொய்யான தகவலை வேகமாக பரப்ப பட்டு பின்னர் அதை சுரேஷ் ரெய்னா மறுத்து தான் நலமாக உள்ளதாக செய்தியை வெளியிட்டு,  செய்தியின் பொய் தன்மை தன்னையும் குடும்பத்தையும் கவலையில் ஆழ்துவதாக கூறினார்.

இப்போது பேஸ்புக் நிறுவனம் இதன் விபரீதம் அறிந்து, இந்தியாவில் இதனை தடுக்க ஐந்து புதிய நிறுவனத்தை அமர்த்தி உள்ளது. எந்த ஒரு செய்தியிலும், புகைப்படம் அல்லது காணொளியில் இருப்பது பொய்யான தகவல் என்று அறிந்தால், அவர்களே அந்த போஸ்ட்டை எடுத்து விடுவார்கள்.

ஏற்கனவே இரண்டு நிறுவனம் இந்த வேலையில் ஈடு பட்ட போது கூடுதலாக ஐந்து நிறுவனத்தை பேஸ் புக் இப்போது ஈடுபடுத்தி உள்ளது.இனி மக்களிடம் வதந்திகளையும் பொய்யையும் பரவ செய்யும் சமூக கிருமிகள் எளிதில் அழிக்கப் படும்.

Related posts

வழமைக்குத் திரும்பிய சமூக ஊடக செயலிகள்

SL News

ஏர்டெல் மாதாந்திர ரீசார்ஜ் செலவைக் குறைக்க புதிய சலுகைகள்

N N

சூரியனை மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட படம் வெளியீடு!!

World News