fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

விஜய் மக்கள் இயக்கத்தினர் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார்..!

நடிகர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது காவல்துறையிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர் புகார் அளித்துள்ளனர். பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தனது நடவடிக்கைகள் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அந்நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், நிகழ்ச்சி முடிந்த பிறகும் சர்ச்சைகளை விடுவதாயில்லை, சர்ச்சைகளும் அவரை விடுவதாயில்லை.

அவர் அண்மையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்தார். அது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகு நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோரையும் மீரா மிதுன் கடும் விமர்சனம் செய்தார். இதனால் கடும் கோபமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள், மீரா மிதுனை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது.

அதில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரை சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடனடியாக மீராமிதுன் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. நடிகை மீரா மிதுன் விஜய், சூர்யா மட்டுமல்லாது திரிஷா, மணிரத்னம் உள்ளிட்ட பலரையும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

இனி ஆக்ஷன் படங்களில் நடிக்கமாட்டேன்- சிவகார்த்திகேயன் அதிரடி!!

N N

ரஜினியின் இரட்டை வேடத்தில் தயாராகும் 166 வது படம்

N N

ராம், ஜானுவை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் கௌரி கிஷான் ட்விட் !

TamilTwin India