சூர்யா, சமீரா ரெட்டி நடித்து கௌதம் மேனன் இயக்கிய வெற்றிப் படம் வாரணம் ஆயிரம். காக்க காக்க படத்திற்கு பிறகு சூர்யாவின் மார்க்கெட்டை மிகப்பெரிய அளவிற்கு எடுத்து சென்ற படம் இது.
வாரணம் ஆயிரம் மூலம் தான் சூர்யாவிற்கு பெண்கள் மற்றும் கல்லூரி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம்.
இரட்டை வேடத்தில் நடித்து சூர்யா மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். இன்றளவும் காதலர்கள் மத்தியில் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் இந்த படத்தில் சூர்யா சமீரா ரெட்டியின் காட்சிகள் இன்றும் யாராலும் மறக்கமுடியாத ஒன்றாகும். சமீரா ரெட்டிக்கு கிடைத்த இந்த வாய்ப்பானது அசின் கைவிட்டதால் கிடைத்தது என்பது அதிர்ச்சிதான்.

இப்படத்தை முதலில் சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற பெயரில் அசினை வைத்து தான் கௌதம் மேனன் எடுத்துள்ளார். சில காரணங்களால் அசின் விலக, பிறகு சமீராவிற்கு வாய்ப்பு வந்துள்ளது. அசின் நடித்திருந்தால் இதைவிட அதிக அளவு வரவேற்பு இருந்திருக்கலாம். ஆனால், அசினுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. இந்தச் செய்தி சமீபத்திலே பெரும்பாலானோர்க்கு தெரிய வந்துள்ளது.