fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களின் முக்கிய விடயங்களான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மனிதத்துவத்துக்கு ஒவ்வாத குற்றங்கள் தொடர்பாகப் பக்கச்சார்பற்ற விசாரணைகளை சர்வதேசம் மேற்கொண்டு பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்க வேண்டும் எனும் தீர்மானத்தை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் நீதி கோரி நாளை செவ்வாய்க்கிழமை(19) முன்னெடுக்கப்படவுள்ள பேரணி மற்றும் போராட்டங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

News Flash

இதுதொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம்(18) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த இரண்டு வருடங்களாகத் தமது உறவுகளைத் தேடி வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் உறவுகளுக்கு நீதி வேண்டிய போராட்டத்துக்குத் தார்மீக ஆதரவு வழங்கவேண்டியது மனிதத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் தார்மீகக் கடமையாகும்.

இத்தகைய தார்மீகப் பொறுப்பை உணர்ந்தவர்களாகச் சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து இப்போராட்டம் வெற்றிபெற பங்களிப்பு வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே, நாளைய தினம்(19) நடைபெறவுள்ள போராட்டத்துக்கு அனைவரும் மனமுவந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் – சுரேன் ராகவன்

World News

அரசியல் கட்சிகள் விற்பனை செய்வதைத் தடுக்க வருகிறது புதிய சட்டம்!

TamilTwin

முதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் இன்று

World News