fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்களுக்கு யாழ்.மாநகர சபை விதித்துள்ள காலக்கெடு!

Jaffna Municipal Council

யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் இயங்கி வரும் உணவகங்கள், வர்த்தக நோக்குடைய விடுதிகள், தங்குமிடங்கள், பிரத்தியேக தங்குமிட வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், வியாபார நிலையங்கள் ஆகியவற்றை இதுவரை பதிவு செய்யத் தவறியவர்கள், உரிமக் கட்டணங்களை செலுத்தத் தவறியவர்கள் ஆகியோர் இந்த மதம்-31 ஆம் திகதிக்கு முன்னதாக தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென யாழ். மாநகரசபை தெரிவித்துள்ளது.

குறித்த பதிவு நடவடிக்கைகள் தொடர்பாக யாழ். மாநகர சபையின் 28.09.2019 ஆம் திகதிய ஆறாவது மாதாந்தப் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு யாழ். மாநகர சபை வர்த்தகர்களுக்கும், சேவை வழங்குனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டும் இதுவரை முறையாக முழுமையாகப் பின்பற்றப்படாமை கண்டறியப்பட்டுள்ளது.

மாநகர சபையின் இந்த நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு இந்த மாத இறுதியான 31 ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இந்த நடைமுறையைப் பின்பற்றத் தவறுபவர்களுக்கு எவ்வித கருணையும், சலுகையும், கருணைக்காலமும் வழங்கப்பட மாட்டாது என்பதைக் கண்டிப்புடன் அறியத் தருவதுடன் தவறுபவர்கள் தகுந்த சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் யாழ்.மாநகர சபை சுட்டிக் காட்டியுள்ளது.

Related posts

யாழ். குப்பிழானில் பட்டப்பகலில் யுவதியின் தங்கச்சங்கிலி அறுப்பு: மோட்டார்ச் சைக்கிள் திருடர்கள் துணிகரம்!!

TamilTwin

சீரற்ற காலநிலையால் 4,126 பேர் பாதிப்பு!! (Photos)

TamilTwin

தேர்தலுக்குப் பின்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து முடிவு – அமெரிக்கா

World News