fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து நாளை மறுதினம் புதன்கிழமை(03) காலை-09 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளைத் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.

Related posts

எச்சரிக்கை..! இன்று இரவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு

World News

கொழும்பிற்கு வந்த பேராபத்து: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

World News

ஆதரவற்ற இல்லங்களுடன் இணைந்து நினைவுநாள் அனுஷ்டித்த புலம்பெயர் உறவு! (Video, Photos)

TamilTwin