வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வும், பிரயோகப் பரீட்சையும் நாளை மறுதினம் வியாழக்கிழமை(21) முதல் இடம்பெறுமென மாகாணக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் மூன்றாம் வகுப்பு 1(அ) தரப் பிரிவுக்கு விஞ்ஞானத் தகவல் தொழில்நுட்பப் பாடங்களுக்கான பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவால் கடந்த ஒக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது. பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும், பிரயோகப் பரீட்சையும் எதிர்வரும் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் மாகாணக் கல்வியமைச்சில் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.