fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வடக்கு மாகாணத்தில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் அதிக வெப்பமுடனான காலநிலை நிலவுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

srilanka jaffna high temprature

இதுதொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அதிக வெப்பமான காலநிலையால் அதிக களைப்பு உள்ளிட்ட உடலியயல் மாற்றங்கள் ஏற்படக் கூடுமென்பதால் போதுமானளவு நீரை அருந்த வேண்டும். 

இயன்றளவு பொதுவெளிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதுடன், இயன்றளவு நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 
இதேவேளை, நேற்றைய தினமும்(07) வடக்கு மாகாணத்தில் அதிகரித்த வெப்பமுடனான காலநிலை நிலவியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

Related posts

2020 உலக பட்டினி குறியீட்டில் இலங்கை முன்னேற்றம்

SL News

தமிழ்த்தேசியக் கட்சிகளின் இளைஞரணிகளை வெகுவாகப் பாராட்டிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி! (Video, Photos)

TamilTwin

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை மறுதினம் நள்ளிரவுடன் நிறைவு!

World News