மஹா சிவராத்தியை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்த வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கான பதில் பாடசாலை நாளை மறுதினம் சனிக்கிழமை(09) இடம்பெறுமென வடமாகாணக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மஹா சிவராத்தியை முன்னிட்டு இறை அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் பொருட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி கடந்த செவ்வாய்க்கிழமை(05) வடமாகாணப் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி-சுரேன் ராகவன் அறிவித்திருந்தார். இதற்கமைய அன்றைய தினம் வடமாகாணப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே மேற்படி விசேட விடுமுறைக்கான பதில் பாடசாலை நாளை மறுதினம் இடம்பெறுமென வடமாகாணக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் பதில் பாடசாலை இடம்பெறுவதை உறுதிப்படுத்தி அறிக்கையிடுமாறு வடக்கிலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.