fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வடக்கின் சில பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Electricity-board-sri-lanka

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். காங்கேசன்துறை, காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்,காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், மயிலிட்டி, மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்(புதியது), தையிட்டி, வறுத்தலைவிளான், வீமன்காமம், பலாலி, பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளிலும்,

நாளை காலை-09 மணி முதல் மாலை- 05.30 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி, இராமநாதபுரம், பன்னங்கண்டி, வட்டக்கச்சி Agriculture Development, வட்டக்கச்சி Agriculture Training Centre, இரணைமடு SLAF Camp-1, இரணைமடு SLAF Camp-2 ஆகிய பகுதிகளிலும்,

நாளை காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் பட்டாணிச்சூர் கிராமம், ஆண்டியப் புளியங்குளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நல்லூர் கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி: ஏராளமானோர் பங்கேற்பு! (Video, Photos)

TamilTwin

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம்: ஒருவர் படுகாயம்

World News

டிரம்ப்பின் உயர் அதிகாரி கூட்டமைப்பினரை சந்தித்தார்!

World News