fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வடகிழக்கில் அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியுடன் கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் எதிர்வரும்-13 ஆம் திகதி புதன் கிழமை அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கறுப்புப் பட்டி அணிந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

News Flash -ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியுடன் கவனயீர்ப்புப் போராட்டம்

குறித்த போராட்டத்துக்கான அழைப்பினை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மற்றும் தரம் iii புதிய அதிபர் சங்கம் ஆகியன கூட்டிணைந்து விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேற்படி மூன்று சங்கங்களும் இணைந்து இன்று பிற்பகல்(08) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

13.3.2019 அன்று வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

குறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் தமது வேதனங்கள் அதிகரிக்கப்படவேண்டுமெனவும், அவசியமற்ற சுமைகள் நீக்கப்படவேண்டும் எனவும், மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை எனவும் பல போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தப் பயனும் இல்லை.

மாறாக எதிர்வரும் 13.03.2019 (புதன்கிழமை)அன்று ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பளத்தை உயர்த்துதல், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றுதல், மொத்தத் தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6% ஒதுக்குதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை மாணவர்களும், பெற்றோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்குச் சென்று காலை-08 மணிமுதல் காலை 08.30 மணிவரை கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து பாடசாலை நுழைவாயில் அமைதியாக ஒன்றுகூடித் தமது கவனயீர்ப்பை வெளிப்படுத்தி, அன்றைய நாள் முழுவதும் கறுப்புப் பட்டியுடன் கடமையில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை

SL News

யாழ். பருத்தித்துறையில் இரு தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்து தப்பித்த நபர்!

TamilTwin

அஞ்சல் வாக்களிப்புக்கள் நாளை முதல் ஆரம்பம்

World News