Tuesday, December 7, 2021
Homeதமிழ்படித்ததில் பிடித்ததுஇப்படி ஒரு அரசியல்வாதியை உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கிறீர்களா?

இப்படி ஒரு அரசியல்வாதியை உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கிறீர்களா?

இந்தியாவின் இரண்டாவது பிரதமர்  லால் பகதூர் சாஸ்திரி ஆவார். இவரை பிரதமர்  என்று குறிப்பிடுவதை விட தன்னலமற்றவர் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

அன்றைய காலகட்டத்தில் அவருடைய சம்பளம் 15 ரூபாயாக இருந்தது, அவர் அந்த சம்பளத்தை தன் மனைவியிடம் கொடுத்து குடும்பத்தை நன்முறையாக நடத்தி வந்தார்.

இப்படி ஒரு அரசியல்வாதியை உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கிறீர்களா?

ஒரு நாள் சாஸ்திரியின் நண்பர் இவரை பார்க்க வந்தார், அப்போது அவர் சாஸ்திரியிடம் தனக்கு அவசரமாக ஐந்து ரூபாய் தேவைப்படுவதாகக் கூறினார். உடனே சாஸ்திரி தன்னுடைய வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக உள்ளது, கூடுதலாக அவரிடம் பணம் ஏதும் இல்லை என்றார்.

சாஸ்திரியின் மனைவி சாஸ்திரியை அழைத்து அவர் கொடுக்கும் சம்பளத்தில் ஐந்து ரூபாய் சேமித்து வைத்துள்ளதாக தெரிவித்தார். அதனைப் பெற்று நண்பரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு நேரடியாக அவருடைய அலுவலகத்திற்கு சென்றார். தன் குடும்பத்தில் மாதம் 5 ரூபாய் மிச்சப்படுகிறது எனவே 10 ரூபாய் சம்பளம் மட்டுமே தனக்கு போதுமானது என கடிதம் சமர்பித்து விட்டு வந்தார் லால் பகதூர் சாஸ்திரி.

இப்படி ஒரு தன்னலம் கருதாத தலைவரை நீங்கள் பார்த்ததுண்டா?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments