fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நடிகை ருஹி சிங்கிற்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்

                ருஹி சிங், இந்தி நடிகையான இவர் நட்டி என்கிற நட்ராஜ் நடித்த போங்கு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.  இவர் தமிழில் அறிமுகம் ஆகும் முதல் படம் இது ஆகும்.  இவர் இந்தியில் காலண்டர் கேர்ள்ஸ், இஷ்க் பார் எவர் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.  தற்போது இவருக்கு கடந்த ஒரு மாதமாக செல்போன் மூலம் வாலிபர் ஒருவர் மிரட்டல் விடுத்து வருவதாக ருஹி சிங் கூறி உள்ளார்.

நடிகை ருஹி சிங்கிற்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்

      இது குறித்து ருஹி சிங் பின்வருமாறு கூறி இருக்கிறார், அனுராய் கஷ்யப் என்ற இந்தி இயக்குநர் எனக் கூறிக் கொண்டு ஒரு நபர் செல்போனில் ஆபாச செய்திகளையும் மிரட்டல்களையும் விடுத்து வருகிறார்.  அவருடைய நம்பரை பிளாக் செய்தாலும் புது புது எண்களில் இருந்து இது போல் தொல்லைக் கொடுத்து வருகிறார்.  இது குறித்து போலிஸில் புகார் அளித்தும் எந்த தகவலும் இல்லை.  மேலும் அந்த வாலிபருடைய தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.  என்னைப் பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்.  இது போல உள்ள நபர்களை சும்மா விடக் கூடாது அதனால் தான் பகிரங்கமாக உண்மையை கூறி விட்டேன் என அவர் கூறி இருக்கிறார்.

Related posts

பக்கெட் நிறைய பழத்தைப் போட்டு உடற்பயிற்சி செய்த தமன்னா !

TamilTwin India

கலாபவன் மணி மரணத்தில் திருப்பம் ‘இது தான் மரணத்திற்கு காரணமா’ திடுக்கிடும் தகவல்கள்

TamilTwin India

புது மாப்பிள்ளை யோகிபாபுவிற்கு தனுஷ் கொடுத்த கல்யாண பரிசு !

TamilTwin India