நடிகர் சரத்குமாரும் நடிகை ராதிகாவும் ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து நடித்து உள்ளனர். சூரிய வம்சம் மற்றும் நம்ம அண்ணாச்சி படங்களில் நடித்தனர். இப்பொழுது மீண்டும் இயக்குநர் மணிரத்னம் படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர். நடிகர் சரத்குமாரும் நடிகை ராதிகாவும் பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும் அவர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பினை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படமும் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தினை படை வீரன் படத்தின் இயக்குநரான தனா இயக்க உள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ளார். விக்ரம் பிரபு ஜோடியாக மடோனா செபஸ்டின் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபு தங்கையாக இப்படத்தில் நடிக்கிறார்.

சரத்குமார் நடித்துள்ள அடங்காதே திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அடங்காதே திரைப்படத்தில் ஜி. வி . பிரகாஷ் குமார் மற்றும் சுரபி ஜோடியாக நடித்து உள்ளனர். அடங்காதே திரைப்படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.