fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும் - அமெரிக்கா
இந்தியச் செய்திகள் செய்திகள்

ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும் – அமெரிக்கா

இந்தியாவும் பாகிஸ்தானும் தனது ராணுவ நடவடிக்கைகளை எல்லைப்பகுதியில் தொடருவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

எல்லையில் அமைதி திரும்ப இரண்டு நாடுகளும் முடிவு எடுத்து ஒத்துழைக்க வேண்டும் எனவும், நடவடிக்கை மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் இது இரு நாட்டின் நிலையை வெகுவாக சீர்குலைத்துவிடும் எனவும், இதனால் மக்களிடையே பதற்றம் எப்போதும் நிலவி வரும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி ஆகியோர் கலந்து பேசி சமரசத்திற்கு வரவேண்டும் என்று ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும் - அமெரிக்கா

இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்; இந்திய ராணுவத்தின் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், ஆகையால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், நாட்டு மக்கள் அரசினை முழுமையாக நம்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் எல்லைப்பகுதியில் மக்களிடையே பதற்றம் நிலவியே வருகிறது.

இத்தகைய நிலையில் எல்லைப்பகுதியில் 5 கி.மீ தொலைவிற்கு அரசு, தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தகவல்
தெரிவித்துள்ளார் .

Related posts

டெல்லி விமான நிலையத்தில் சுவீடன் மன்னரை பார்த்து வியந்த மக்கள்!

World News

யாழ் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்

SL News

உடன்அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச விலை தீர்மானம்!

SL News