fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரஜினி உடன் நடிக்கிறார் யோகி பாபு

ரஜினி உடன் நடிக்கிறார் யோகி பாபு

     நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகிறார் யோகி பாபு. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.  இப்படத்தில் ரஜினி உடன்  காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார்.  ரஜினி உடன் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் யோகி பாபு.  இது குறித்து யோகி பாபு அளித்து உள்ள பேட்டியில் பேட்ட படத்திலேயே நான் ரஜினி சார் உடன் நடிக்க வாய்ப்பு வந்தது.  ஆனால் வேறு படங்களில் நடித்துக் கொண்டு இருந்ததால் அந்த வாய்ப்பு போய்விட்டது.  அதிலும் பேட்ட படத்தில் ரஜினி சார் கூடவே வருகின்ற கேரக்டர்.  அந்த வருத்தத்துடனே சுற்றிக் கொண்டு இருந்தேன். இப்பொழுது இந்த படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்த உடன் அந்த வருத்தம் போய்விட்டது. 

     சர்கார் படம் பண்ணும் பொழுது ஏ. ஆர். முருகதாஸ் சார் அடுத்து ஒரு நல்ல செய்தி இருக்கு.  நாம் அடுத்து ஒரு படம் பண்ணுவோம் என்று சொன்னார்.  ரஜினி சார் உடன் நடிக்கப் போவது தான் அந்த நல்ல செய்தி எனத் தெரிய வரும் பொழுது அவ்வளவு சந்தோஷம்.  இந்த முறை வாய்ப்பினை கைநழுவ விட மாட்டேன் என அவர் கூறி இருக்கிறார்.

Related posts

கீர்த்தி சுரேஷின் கொல்கத்தா ஷெட்யூல் ஓவர்

TamilTwin India

பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்கும் அனு கீர்த்திவாஸ்

N N

பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் விக்ரம்

N N