ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் பேட்ட. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பினை பெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். பேட்ட படத்தின சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்திற்கும் அனிருத் இசை அமைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்தின் அடுத்த படத்தினை ஏ. ஆர். முருகதாஸ் இயக்க உள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அனிருத் அளித்த பேட்டியில், ரஜினியின் அடுத்த படத்திற்கும் தான் இசையமைப்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார். மார்ச் மாத இறுதிக்குள் நடிகர்கள் தேர்வை முடித்து விட்டு படப்பிடிப்பிற்கு செல்ல தயாராகி உள்ளது படக்குழு. இப்படத்திற்கு ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்சீட் வழங்கி உள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பை பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது.