fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரஜினியின் இரட்டை வேடத்தில் தயாராகும் 166 வது படம்

இப்போதைக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தெரியவில்லை. அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இது ரஜினியின்  166 வது படம். இந்தப் படம் அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்கவுள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  அரசியலில் இறங்கப் போவதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த் இதுவரை ‘கபாலி’, ‘காலா’, ‘பேட்ட’ஆகிய மூன்று படங்களில் நடித்துவிட்டார். அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

ரஜினியின் இரட்டை வேடத்தில் தயாராகும் 166 வது படம்

இத்திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. ஆனால் இப்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சீர்திருத்த போராளியாகவும் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே ரஜினி, ‘அதிசய பிறவி’, ‘போக்கிரி ராஜா’, ‘பில்லா’, ‘ராஜாதிராஜா’, ‘நெற்றிக்கண்’, ‘ஜானி’, ‘முத்து’, ‘எந்திரன்’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 166 வது படம் இரட்டை வேடத்தில் தயாராகிறது என்றதும் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Related posts

ஜீ5 தளத்தில் வெளியானது பிக்பாஸ் காயத்ரி ரகுராம் இயக்கிய முதல் திரைப்படம் !

TamilTwin India

ரசிகர்களை அதிரவைத்த அயலான் தயாரிப்பாளர்

TamilTwin India

ஹிந்தி படத்தில் நடிக்கும் ரங்கராஜ் பாண்டே

TamilTwin India