தமிழ்நாட்டில் யாரைக்கேட்டாலும் அவர்களுக்கு பிடித்த முதல் நடிகரின் பெயராக இவரின் பெயரே இருக்கும். மக்களுக்கு மட்டும் அல்லாது, சினிமாத்துறையை சார்ந்த ஹூரோ ஹூரோயினுக்கும் பிடித்தவர் இவரே, வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தை முதல் பெரியவர் வரை சொல்லும் பெயரும் இவரே.
அவர்தான் சினிமாவின் முன்னணியில் இருக்கும் மூத்த நடிகர் ரஜினிகாந்த், காலங்கள் மாறினாலும் இப்போது கூட இவரின் படத்திற்கு இருக்கும் வரவேற்பு தனிதான்.

இவரின் படங்கள் வெளிவரும் நாட்கள் ரசிகர்கள் மத்தியில் விழாக்காலங்களாகவே இருக்கும். நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் திருமணம் பல சர்ச்சைகளுக்கு பின் முடிந்த இந்த நிலையில் இப்போது ரஜினி வீட்டில் மீண்டும் ஒரு கொண்டாட்டம். ஆம் இன்று ரஜினியின் 38 வது திருமணநாள்.
ரஜினி தனது திருமணநாள் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மற்றும் புது மாப்பிள்ளையுடன் கொண்டாடி வருவதாக தகவல் வந்துள்ளது. ரசிகர்கள் தங்கள் தலைவர் ரஜினிக்கு வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.