பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அடுத்து இவர் தனுஷுடன் கொடி படத்தில் நடித்தார். கொடி படத்தில் த்ரிஷாவை விட அனுபமா பரமேஸ்வரன் பார்க்க அழகாகவே இருப்பார். தற்போது இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்பொழுது அனுபமா பரமேஸ்வரன் செய்த செயலால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இவர் சமூக வலை தளங்களில் தன்னுடைய புதிய படங்களை வெளியிட்டு உள்ளார். அவருடைய படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அனுபமாவுக்கு அழகே அவருடைய நீளமான சுருள் கூந்தல் தான். ஆனால் அவர் தனது நீண்ட கூந்தலை நறுக்கிவிட்டார். இதற்கு முன் அவர் தன்னுடைய சுருள் கூந்தலை ஸ்ட்ரெய்டனிங் செய்திருந்தார்.
அதற்கும் சில ரசிகர்கள் உங்களுடைய சுருள் முடி தான் உங்களுக்கு அழகு என்று கூறி இருந்த நிலையில் அவர் இவ்வாறு தனது கூந்தலை நறுக்கிவிட்டார். சில ரசிகர்கள் உங்களுடைய இந்த புதிய தோற்றமும் அழகாக இருப்பதாக கூறி அவரை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர்.