fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரசிகர்களுக்காக கவர்ச்சி யுத்தம் செய்யும் ரைஸா வில்சன்

ரைஸா வில்சன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தாலும் இவர் நடிகையானது தமிழில் தான். தனது கல்லூரி படிப்பின் பொழுதே ரைஸாவிற்கு மாடலிங் மேல் அதித ஆசை அதனால் மாடலிங் துறையை தேர்ந்தேடுத்து அதில் கவனம் செலுத்தி வந்தார்.

மிஸ் தென்னிந்திய பட்டம் 2011 பட்டம் பெற்றார் ரைஸா. மற்றும் இது போல பல விருதுகள் பெற்றுள்ளனர் ரைஸா. மிஸ் தென்னிந்திய அழகிய சிரிப்புகான விருதும் கிடைத்துள்ளது. இவருக்கு தமிழ் திரைப்படமான வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இதனை பயன்படுத்திக் கொண்டார் ரைஸா.

பின் தமிழில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்றார் ரைஸா. சுமார் 63 நாட்கள் அந்த இல்லத்தில் இருந்து பின் வெளியேறினார் இவர். இதன் பின் ரைஸாவிற்கு பட வாய்ப்புக்கள் வந்தது. பிக் பாஸ் இல்லத்தில் தன் உடன் இருந்த சக போட்டியாளர் ஆன ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ரைஸா. சில பல காரணங்களால் இந்த படம் டிராப் ஆனது. இதன் பின் தனது வெற்றி கூட்டணியான பியார் பிரேமா காதல் படத்தின் அதே குழு உடன் மீண்டும் இனணகிறார் ரைஸா. பியார் பிரேமா காதல் படத்தின் துனை இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.

ரைஸாவிற்கு மாடலிங் என்றால் மிகவும் பிடிக்கும், சினிமாவில் நடித்து வந்தாலும் மாடலிங் துறையை விடவில்லை. சென்னை இன்டர்நேஷனல் பேஷன் விக் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த ரைஸா பேஷன் ஷோவில் பங்கேற்றார் இதில் கறுப்பு உடையில் கவர்ச்சியாக இருந்தார் ரைஸா வில்சன்.

Related posts

செல்வராகவனின் இயக்கத்தை நேசிக்கிறேன் – நடிகர் சூர்யா

N N

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால்!

TamilTwin India

நீச்சல் உடையில் கும்மாளம் போடும் காஜல் அகர்வால்

TamilTwin India