fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கிய புலம்பெயர் உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்தத்தில் உயிரிழப்புக்களையும், பொருளாதார இழப்புக்களையும் சந்தித்து அன்றாட வாழ்க்கைக்கே கஸ்ரப்படும் இரு குடும்பங்களுக்குப் புலம்பெயர் உறவுகள் அண்மையில் உதவித்திட்டங்கள் வழங்கி வைத்துள்ளனர்.

நோர்வே நாட்டில் வாழும் கயேந்திரன், சங்கீதா ஆகியோர் தமது பிள்ளைகளான காவியன்,துர்க்காவின் பிறந்தநாளை முன்னிட்டு மரகதம் என்பவரைத் தலைமையாகக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு உதவி வழங்கியுள்ளனர்.

குறித்த வீட்டில் துவாரகா, மனோகா ஆகிய இரு பிள்ளைகளும் நீண்ட தூரம் பாடசாலைக்கும், தனியார் வகுப்புகளுக்கும் நடந்து செல்கின்றனர். இவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு உதவும் முகமாக துவிச்சக்கர வண்டியொன்றை வழங்கியுள்ளனர்.

அதே போன்று நோர்வே நாட்டில் வாழும் நிறோஜன் என்பவர் தனது மகனான ஆரோனின் பிறந்தநாளை முன்னிட்டு மனைவியை இழந்த நிலையில் பொருளாதாரத்திற்காக மிகவும் சிரமப்படும் குடும்பமொன்றுக்கு வாழ்வாதார உதவி வழங்கியுள்ளார்.

யுத்தத்தில் மனைவியை இழந்த கிருஷ்ணகுமார் என்பவர் மீண்டும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். அவரும் புற்றுநோயால் இறந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட அவர் கூலி வேலை செய்து தனது நான்கு பிள்ளைகளையும் காப்பாற்றி வருகிறார். இவர்களின் குடும்ப நிலையறிந்து கிருஸ்ணகுமாரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான கோழிகளும், கோழிக் கூட்டிற்கான உபகரணம் மற்றும் உணவு வகைகள் என்பவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்துள்ளார்கள்.

யுத்தத்தின் பின்னர் தமிழ்ச் சமூதாயம் அன்றாட வாழ்வாதாரத்திற்கே கையேந்தும் நிலைமை உருவாகியுள்ளது. யுத்தத்தில் உழைக்கும் வர்க்கம் இறந்தும், காணாமல் ஆக்கப்பட்டமையாலும் அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இவ்வாறான உறவுகளை இனம்கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப் புலம்பெயர் உறவுகள் முன் வரவேண்டும்.

உதவிகள் வழங்கிய புலம்பெயர் உறவுகள்
உதவிகள் வழங்கிய புலம்பெயர் உறவுகள்
உதவிகள் வழங்கிய புலம்பெயர் உறவுகள்

Related posts

யாழ். நல்லூரில் ஆரம்பமாகிறது கிழக்கு மாகாணம் நோக்கிய பாதயாத்திரை

TamilTwin

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியில் செல்ல முடியும்!

World News

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

World News