fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். வலி வடக்கில் பாரியளவிலான காணி சுவீகரிக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

வலி. வடக்கில் பாரியளவிலான கடற்படை முகாமொன்றை அமைக்கும் பொருட்டு காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் நாளை வெள்ளிக்கிழமை(22) இடம்பெறவிருந்த நிலையில் அந்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகத் அரசாங்கத்திடமிருந்து தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

Mavai Senathirajah

வலி. வடக்கில் ஜே 226 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 252 ஏக்கரில் பாரியளவிலான கடற்படை முகாமொன்றை அமைப்பதற்காக காணிகள் சுவீகரிக்கும் பொருட்டு நாளைய தினம் அளவீட்டுப் பணிகள் இடம்பெறுமென நில அளவைத் திணைக்களம் அறிவித்திருந்தது.

தமக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டிருந்த உறுதிமொழியை மீறி மேற்படி காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் நாளைய தினம் (22) வலி. வடக்கில் இடம்பெறவிருந்த காணி அளவீட்டுப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசியங்கவின் அறிவுறுத்தலுக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரண்

World News

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

World News

நீரில் மூழ்கி இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

World News