fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Vayavilan-Central-College-jaffna
இலங்கைச் செய்திகள்

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் க.பொ. த சாதாரணதரத்தில் 80 வீதமான மாணவர்கள் சித்தி

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் கடந்த-2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 80 வீதமானோர் சித்திபெற்று க. பொ. த உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர். இது கடந்த 2017 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையிலும் விட பத்து வீதம் அதிகமாகும்.

இம்முறை க.பொ. த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய மாணவ,மாணவிகளில்
சுருத்திகா சுதாகரன்- 8ஏ,பி
கணேசநாதன் முகிலன்- 7 ஏ, 2 பி
சிவகுமார் ரிசாந்த்- 7 ஏ, பி, சி
வினுஜா செல்வராசா- 7ஏ, பி,எஸ்
அபிரா சிவராசா- 6ஏ, 3 பி
சுதன் தருண்- 6ஏ, 3பி
தமிழினி மதிமோகன்- 6 ஏ, 2 பி
பவினா ஸ்ரீகரன்- 6 ஏ, 2 பி, சி
நிஷானி சந்திரதாசன்- 6ஏ, பி, சி,எஸ்
சின்னராசா தனுசன்- 5 ஏ, பி, 2 சி ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கணித பாட சித்தி வீதமும் இம்முறை கடந்த வருடத்தை விடப் பத்து வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சித்தி வீத அதிகரிப்பிற்கு க.பொ. த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் தமது பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். அத்துடன் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், உப அதிபரின் வழிகாட்டலில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்பட்டமை இம்முறை சித்திவீத அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய அனைத்துத் தரப்புக்களினதும் ஒத்துழைப்புடன் க. பொ .த சாதாரணதர சித்திவீதத்தை மேலும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனக் கல்லூரியின் அதிபர் வி.ரி. ஜயந்தன் தெரிவித்தார்.

Related posts

வெளிநாட்டு வேலை வாய்ப்பு: நாட்டை விட்டு வெளியேறக் கட்டுப்பாடு

World News

ஆனைவிழுந்தான் வனப்பகுதி அழிவின் பின்புலத்தில் உள்ளவர் தொடர்பாக தகவல் வெளியானது!

World News

400 இற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிப்பு

World News