fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஆர். எஸ். தமிந்த புதிதாகப் பதவியேற்பு

யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஆர்.எஸ். தமிந்த இன்று திங்கட்கிழமை(01) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பதவி வகித்து வந்த பாலித பெர்ணான்டோ பொலிஸ் சேவையிலிருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்தே புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஆர். எஸ். தமிந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை காலமும் பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் நலன்புரிக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆர். எஸ். தமிந்த இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று பாடசாலை ஆரம்பம்

World News

வட்டுக்கோட்டையில் இருவர் கொலை!

N N

யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை

TamilTwin