fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். மாநகர சபை முதல்வருக்கு கொலை அச்சுறுத்தல்!

யாழ். மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிற்கு கொலை தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Aarnold - யாழ். மாநகர சபை

கடந்த- 15 ஆம் திகதி தனது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்த நபரொருவர் யாழ். கம்பன் விழாவுக்குச் செல்ல வேண்டாம் எனவும், தமது எச்சரிக்கையை மீறிச் சென்றால் அங்கு வைத்துக் கொலை செய்வோம் எனவும் தொலைபேசியூடாகத் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி இலக்கத்தையும் அவர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கும் யாழ்.மாநகர சபையின் முதல்வர் கொண்டு சென்றுள்ளார்.

இதேவேளை, யாழ்.மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பாகப் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹெரோயினுடன் 7 பேர் கைது!

SL News

காஷ்மீர் கடந்து வந்த பாதையும் இன்றைய நெருக்கடியும்: யாழில் இன்று விசேட கலந்துரையாடல்

TamilTwin

ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய சுவிஸ் நாதன் (Photos)

World News