fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். மண்கும்பான் கடலில் நீராடிய குடும்பத்தலைவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மண்கும்பான் சாட்டிக் கடலில் நீராடிய குடும்பத்தலைவரொருவர் இன்று(16) நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Family man died in mankumpan

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குருநகரைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் இணைந்து சாட்டி கடலில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அவர்கள் கடலில் குளித்த வேளை அவர்களுடன் சென்ற குடும்பத்தலைவரொருவர் காணாமற்போயுள்ளார்.

இது தொடர்பில் மண்கும்பான் கடற்படை முகாமுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடற்படையினரின் சுழியோடிகள் இணைந்து குறித்த குடும்பத் தலைவரைத் தேடி அவரை மீட்டுள்ளனர்.

கரையில் முதலுதவி வழங்கியதையடுத்து அவருக்கு சுவாசம் வருவதாக கூறப்பட்டமையால் உடனடியாக அம்புலன்ஸில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி சம்பவத்தில் யாழ். குருநகரைச் சேர்ந்த ஏ. ஜீட்சன் (வயது-41) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Related posts

கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு மாவை அழைப்பு!

World News

ஏப்ரல் 08 – 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்

World News

சம்பந்தன் இல்லாமல் போனால் கூட்டமைப்புடன் இணையத் தயார்! விக்னேஸ்வரன்

World News