fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். மக்களுக்கு ஓர் அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(05) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, யாழ். உடுப்பிட்டி, நெல்லியடி, நெல்லியடிப் பொலிஸ் நிலையம், நெல்லியடிச் சந்தை, ரூபின்ஸ் வைத்தியசாலை, நெல்லியடி காகில்ஸ் பூட் சிற்றி, இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், நெல்லியடி இலங்கை வங்கிக் கிளை, மந்திகை அம்மன் கோவிலடி, சாரையடி, கிராமக் கோடு, கரணவாய் , நாவலர் மடம், தூதாவளை, கரவெட்டி, சக்களாவத்தை, இரும்பு மதவடி, வதிரி, திக்கம், மனோகரா, சித்தி விநாயகர் கோவிலடிப் பிரதேசம், தேவரையாழி, தம்பசிட்டி, சாளம்பை, பருத்தித்துறை VM வீதி 1 ஆவது சந்தி, பருத்தித்துறை கல்லூரி வீதி, பருத்தித்துறை C.T. B பிரதேசம், பருத்தித்துறைச் சந்தை, பலாலி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து முலவைச் சந்தி வரை, புகையிரத நிலைய வீதி, மார்ட்டின் வீதி, யாழ். 1 ஆம், 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள், கிறீன் கிறாஸ் விடுதி, யாழ். புகையிரத நிலையம், DAN தொலைக்காட்சி நிலையம், ஹொட்டல் NORTH GATE, திருநெல்வேலிச் சந்தையிலிருந்து இராமலிங்கம் சந்திப் பிரதேசம் வரை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.      

{செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்}         

Related posts

மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்தம்; 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

World News

யாழில் இடம்பெற்ற நீதி நூற் தொகுப்புக்கள் அறிமுக விழா

TamilTwin

முகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளிக்கு ஏற்பட்ட சிக்கல்!

TamilTwin