fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். புன்னாலைக்கட்டுவனில் இனம் தெரியாத குழு பெரும் அட்டகாசம்

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் சிவராத்திரி தினத்திற்கு மறுநாளான இன்று செவ்வாய்க்கிழமை(05) அதிகாலை வேளையில் வாள்கள், கொட்டன்களுடன் வந்த இனம்தெரியாத சிலர் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

புன்னாலைக்கட்டுவனில் இனம் தெரியாத குழு பெரும் அட்டகாசம்

இன்று அதிகாலை-03.05 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியிலுள்ள வீட்டு மதிலேறிப் பாய்ந்த சிலர் வீட்டின் யன்னல் கதவுக்குத் தாக்கியுள்ளனர். அப்போது குறித்த வீட்டிலிருந்த பாடசாலை மாணவி படித்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் இணைந்து அவலக் குரல் எழுப்பவே அவர்கள் அங்கிருந்து சடுதியாக வெளியேறி வீட்டின் முன் கேற்றை அடித்துச் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அங்கிருந்து சென்ற குறித்த குழு சுமார்- 200 மீற்றர் தூரத்திலுள்ள வீடொன்றின் முன் கேற்றுக்கு பலமாக காலால் உதைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் கேற்றின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்துள்ளது. குறித்த சம்பவத்தையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி அருகிலுள்ள வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதன் பின்னர் அங்கிருந்து சென்ற குழுவினர் சுமார்- 100 மீற்றர் தூரத்திலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்து வீட்டின் முன்பக்க யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். வீட்டிலிருந்த இளம் குடும்பப் பெண்மணி தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அவலக் குரல் எழுப்பவே அட்டகாசம் புரிந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த குழுவினர் முதலில் தாக்குதல் நடாத்திய வீட்டிற்கு அண்மையிலுள்ள இன்னொரு வீட்டின் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடாத்தியுள்ளனர். சத்தம் கேட்டு அருகிலுள்ள வீட்டின் குடும்பத் தலைவர் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பகுதியை நோக்கி சென்றுள்ளார். அப்போது இரு இளைஞர்கள் சூட்டிப் பப் மோட்டார்ச் சைக்கிளொன்றில் தங்கள் முகங்களைத் தலைக்கவசத்தால் மறைத்தவாறு வந்துள்ளதைக் கண்டுள்ளார். அவர்கள் குறித்த குடும்பத் தலைவர் மீது போத்தலால் எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஒரே இரவில் நடந்த மேற்படி சம்பவங்கள் புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, மேற்படி குழுவினர் வீடுகளில் திருடும் நோக்கில் வந்தார்களா? அல்லது வேறு நோக்கத்துடன் வந்தார்களா? என்பது தொடர்பில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புன்னாலைக்கட்டுவனில் இனம் தெரியாத குழு பெரும் அட்டகாசம்

Related posts

பல்கலை மாணவிகளின் கைப்பேசிகளை திருடிய நால்வர் கைது

World News

யாழில் நேற்றும் பரிசோதனை: ஒருவருக்கு கொரோனா உறுதி!

TamilTwin

யாழில் புகைப்பட திருவிழா!- திரளும் இளையோர்கள் (Video)

World News