fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படும் மாபெரும் எழுச்சிப் பேரணி: வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் போக்குவரத்து ஏற்பாடுகள்

தமிழினத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நாளை சனிக்கிழமை(16) யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி யாழ்.மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக)வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நன்மை கருதி வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை, நெல்லியடி, ஆவரங்கால், கோப்பாய், கல்வியங்காடு, ஊடாக காலை 8.10 மணிக்கும், அச்சுவேலி, ஆவரங்கால், கோப்பாய், கல்வியங்காடு, நல்லூர் ஊடாக காலை 8.20 மணிக்கும், வசாவிளான், புன்னாலைக்கட்டுவன், திருநெல்வேலி, ஊடாக காலை 8.20 மணிக்கும், மாவிட்டபுரம், சுன்னாகம், கொக்குவில் ஊடாக காலை 8.10 மணிக்கும், காரைநகர், மூளாய், சுழிபுரம், சித்தங்கேணி, மானிப்பாய், ஊடாக காலை 8.20 மணிக்கும், கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், ஊடாக காலை 8.30 மணிக்கும், கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி ஊடாக காலை 8.30 மணிக்கும் என பேருந்துகள் புறப்பட்டு யாழ்.பல்கலைக்கழகத்தை வந்தடையவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வன்னேரி, அக்கராயன், ஸ்கந்தபுரம், கோணாவில், ஊற்றுப்புலம், கனகபுரம், கிளிநொச்சி, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும், தேராவில், புளியம்பொக்கணை, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும், கல்மடு,ராமநாதபுரம், வட்டக்கச்சி, கோவிந்தன் கடைச்சந்தி, ,ரத்தினபுரம், பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும், கிளிநொச்சி வைத்தியசாலை, பரந்தன், பளை, ஊடாக காலை 7.00 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டு பல்கலைக்கழத்தை வந்தடையவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து துணுக்காய்ப் பிரதேச செயலகம், மல்லாவி, வன்னிவிளாங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம் ஊடாக காலை 7.00 மணிக்கும், முள்ளியவளை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, விசுவமடு, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும்,
பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், வன்னிவிளாங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம் ஊடாக காலை 7.00 மணிக்கும், அளம்பில், சிலாவத்தை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டு பல்கலைக்கழகத்தை வந்தடையவுள்ளன.

மேலும் மன்னார் மாவட்டத்திலிருந்து தலைமன்னார், பேசாலை, மன்னார், முழங்காவில், பூநகரி ஊடாக காலை 7.00 மணிக்கும், முத்தரிப்புத்துறை, நானாட்டான், வங்காலை, மன்னார், முழங்காவில், பூநகரி ஊடாக காலை 7.00 மணிக்கும், சிலாபத்துறை, முருங்கன், மன்னார், முழங்காவில், பூநகரி ஊடாக காலை 7.00 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டுப் பல்கலைக்கழகத்தை வந்தடையவுள்ளன.

வவுனியா மாவட்டத்திலிருந்து வவுனியா பழைய பஸ் தரிப்பிடம், ஓமந்தை, மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும், சிதம்பரபுரம், வவுனியாப் பல்கலைக்கழகம், ஓமந்தை, மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பூநகரி ஊடாக காலை 7.00 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டு பல்கலைக்கழகத்தை வந்தடையவுள்ளன.

இதேவேளை தேவைகளிற்கேற்ப பேரூந்து ஒழுங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

20 ஆவது திருத்தம் ஆபத்தானது!! (Photo)

TamilTwin

கொரோனா வைரஸ் – மேலும் 02 பேர் அடையாளம்

World News

பட்டதாரி பயிலுனருக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

World News