யாழ். பலாலி விமானத்தள அபிவிருத்தி குறித்த இணைப்புக் குழுக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை(08) யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மேற்கொண்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி- சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி கூட்டத்தில் பலாலி விமானத்தளம் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.