fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். பருத்தித்துறையில் இரு தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்து தப்பித்த நபர்!

யாழ். வடமராட்சி பருத்தித்துறை மந்திகை பகுதியில் இன்றைய தினம்(13) 40 வயதான இளம் நபரொருவர் மண்ணெண்ணை ஊற்றித் தனக்குத் தானே தீமூட்டி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினர்களால் காப்பாற்றப்பட்ட குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த மேற்படி நபர் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து இன்று காலை தப்பிச் சென்ற குறித்த நபர் வர்த்தக நிலையமொன்றில் மண்ணெண்ணை வாங்கித் தனக்குத் தானே தீமூட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அம்புலன்ஸ் வண்டிக்கு அறிவித்த அயலவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

jaffna point-pedro-men-try-to-firehimself

Related posts

யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் 24 மணி நேரமும் தங்கியிருந்து பணியாற்றிய அமரர் சிவபாலன்: செஞ்சொற்செல்வர் புகழாரம் (Video)

TamilTwin

முல்லைத்தீவில் 230 தொண்டர் ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

World News

உருளைக்கிழங்கு கொள்கலனில் சிக்கிய 75 கிலோ ஹெரோயின்

World News