தனது உடைமையில் மாவாப் பாக்குகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்.வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை(04) பிற்பகல் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடிப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேகத்துக்கிடமான வகையில் வீதியால் சென்ற இளைஞரொருவரை இடைமறித்துப் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் மாவாப் பாக்குகளைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
மாவாப் பாக்குகளுடன் கைதானவர் யாழ். கரணவாய் பகுதியைச் சேர்ந்தவரெனவும், சந்தேகநபரை இன்றைய தினம்(05) நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.