யாழ். யோகா உலகம் அமைப்பு புதிய யோகா பயிற்சி நெறிகளை யாழ். நல்லூரில் அமைந்துள்ள அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த பயிற்சி நெறிகளுக்கான அறிமுக நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. யாழ். யோகா உலகம் அமைப்பின் இயக்குனர் சி. உமாசுதன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் உளவளத் துணை ஆசிரியர் இக்னேசியஸால் யோகா தொடர்பான விசேட கருத்துரையாற்றுவார்.
நாளை ஆரம்பமாகும் புதிய யோகா பயிற்சி வகுப்புக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் 06 மணி முதல் 07 வரை இரு பிரிவுகளாக ஒருமாதம் வரை தினமும் இடம்பெறுமென யாழ். யோகா உலகம் அமைப்புத் தெரிவித்துள்ளது.