fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Tellippalai-Hospital-New Power Supply Opening
இலங்கைச் செய்திகள்

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதியின் முயற்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இவ்வாறு நிறைவுபெற்ற அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான நிகழ்வு இன்று சனிக்கிழமை(02.03.2019)காலை-09.30 மணி முதல் மேற்படி வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி யோ.திவாகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா, வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டப் பணிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 25 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்ட புதிய மின்பிறப்பாக்கிகள் கூடம் இதன்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

எட்டு  மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஒட்சிசன் விநியோகப் பகுதி மற்றும் மூன்று மில்லியன் ரூபாவுக்கு அமைக்கப்பட்ட வைத்திய நிபுணர்களுக்கான இரண்டு ஓய்வு அறைகள் என்பனவும் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் அமைந்துள்ள மண்டபத்தில் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் இடம்பெற்றது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் விருந்தினர்களுடன் யாழ். மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவஸ்ரீ மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Related posts

அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதம் தொடர்கிறது!!

TamilTwin

பக்த வெள்ளத்தில் நல்லைக் கந்தன் சித்திரத்தேர் பவனி : ஓர் சிறப்புப் பார்வை (Videos, Photos)

TamilTwin

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்.வணிகர் கழகத் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

TamilTwin