fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

யாழ். தாவடியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை!

கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுமிக்குத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்துக் குறித்த சிறுமி அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். தாவடிப் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் நேற்று வியாழக்கிழமை(26) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயேயே குறித்த சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி}

Related posts

பிரான்ஸில் மசூதியை எரிக்க முயன்ற நபர்! இருவரை சுட்டுவிட்டு தப்பிக்கவும் முயற்சி

World News

தமிழர்கள் மேல் அனுதாபம் கொண்டிருப்பது பிழையில்லை: புலிகளை ஆதரிப்பது தவறு!- மலேசிய அதிகாரிகள்

World News

நியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட டிரம்ப் எதிர்ப்பு!

World News