fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாசாலையில் மேல்மாடிக் கட்டடங்கள் திறந்து வைப்பு: பயன்படுத்த முடியாத நிலை!

யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை 2016 – 2020 தேசிய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை(01) முற்பகல்-11.30 மணி முதல் இடம்பெற்றது. 

பாடசாலை அதிபர் இ. ஹஸ்ரன் றோய் தலைமையில் இடம்பெற்ற விழாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராசா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இரண்டு மேல் மாடிக் கட்டடங்களை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராசா

இந்த நிகழ்வில் கல்வியலாளர்கள், பாடசாலை, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர். 

இன்று திறந்து வைக்கப்பட்ட மாடிக் கட்டடங்களில் ஆய்வு கூடம் அமைந்துள்ள கட்டடம் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் ஆய்வு கூடத்துடன் கணனிக் கூடம், நவீன இலத்திரனியல் நூலகம், கணித அறை என்பன தனித்தனியான பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.  

இன்னொரு மாடிக் கட்டடம் வகுப்பறைகளை மாத்திரம் கொண்ட சுமார்- 75 இலட்சம் ரூபா செலவிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

நகரத்திலுள்ள பாடசாலைகளுக்கு ஈடாக கிராமப் புறப் பாடசாலை மாணவர்களை வளர்த்தெடுக்கும் நோக்குடனேயே கடந்த-2015 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற நல்லாட்சி அரசாங்கம் மேற்படி திட்டத்தைக் கொண்டு வந்தது. 

யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாசாலை - புதிய கட்டடங்களின் திறப்பு விழா

இதேவேளை, குறித்த கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள போதிலும் உரிய உபகரணங்கள் இன்னும் வழங்கப்படாத காரணத்தால் மேற்படி இரு மேல்மாடிக் கட்டடங்களையும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இலங்கையில் அண்மையில் ஏற்பட்டிருந்த  அரசியல் குழப்ப நிலைமையே உபகரணங்கள் வழங்கப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.

யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாசாலை - புதிய கட்டடங்களின் திறப்பு விழா
யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாசாலை - புதிய கட்டடங்களின் திறப்பு விழா
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராசா

Related posts

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

World News

தமிழர்களை வழிநடத்துகின்ற பொறுப்பு தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கே உண்டு: சொல்கின்றார் மாவை

World News

இலண்டனில் யாழ். யுவதி கொரோனாவால் உயிரிழப்பு!

World News