தமது காணிக்குள் நின்று சிலர் சினிமாப் பாடல்கள் பாடியதால் மன உளைச்சலுக்குள்ளான குடும்பஸ்தரொருவர் தமக்கு இடையூறு ஏற்படடுதாகத் தெரிவித்துக் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். கொடிகாமம் அல்லாரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக காணி உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து மூன்று சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்றைய தினம்(22) முற்படுத்தினர்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மூவரையும் தலா இரண்டரை இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.