யாழ். குடாநாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்று திங்கட்கிழமை(18) பகல் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது. இதன் காரணமாகப் பொதுமக்களின் அன்றாடச்செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

குறித்த மின்சாரத் தடை சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வரை அமுலிலிருந்துள்ளது.
இதேவேளை, மேற்படி மின்சாரத் தடைக்கான காரணம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் உயரதிகாரியொருவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் குறைந்தளவு மின்னழுத்த நிலை ஏற்பட்டமையே காரணமெனத் தெரிவித்தார்.
இதேவேளை, மேற்ற்படி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வடக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் மின்தடைப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.