fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். கீரிமலையில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்புக் கலை நிகழ்வுகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் கீரிமலையில் அமைந்துள்ள சிவபூமி மடத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை(04)  இரவு-07 மணி முதல் சிறப்புக் கலை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

Naguleswaram-Temple-Keerimalai-Jaffna

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர்.கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் சமயச் சொற்பொழிவு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து  குருசாமி சுகுமார் குழுவினரின் வீரபத்திரர் வசந்தன் கூத்தும், மாவிட்டபுரம் பொதுச்சேவைக் கழகம் வழங்கும் சத்தியவான் சாவித்திரி இசை நாடகமும், கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களின் இசை நடன நிகழ்ச்சியும், அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவர்களின் காவடியாட்டம் மற்றும் ஒயிலாட்ட நிகழ்வுகளும், தெல்லிப்பழை தமிழ்ச் சங்கம் வழங்கும் ‘அரிச்சந்திர மயானகாண்டம்’ இசை நாடகமும் இடம்பெறவுள்ளன. 

அத்துடன் மேற்படி கலைநிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைத்து அடியவர்களுக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  

Related posts

கொரோனா: சமூக பரவல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை!

World News

ஒத்திவைக்கப்பட்ட இளஞ் சைவப்புலவர், சைவப்புலவர் பரீட்சைகள் அடுத்தமாதம்….

TamilTwin

‘Tamil Twin’ செய்திச் சேவையின் மற்றொரு சேவை ஆரம்பம்

TamilTwin