fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுப்பு (Video, Photos)

கொவிட்- 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள் இன்றைய தினம்(29) மீளவும் திறக்கப்பட்டுள்ளன.    

இந்நிலையில் பாடசாலைகளின் ஆரம்பம் கொவிட்-19 இற்குப் பின்னரான காலப்பகுதி என்பதனால் தொற்று நீக்கம் செய்ய வேண்டிய தேவை அவசியமானதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பாடசாலைகளுக்குத் தொற்று நீக்கும் பணிகள் யாழ்.மாவட்டத்தில் முதலாவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சனின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

அந்த வகையில் யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியில் அதிபர் ஜனாப். எம்.சேகுராஜிதுவின் கோரிக்கையின் அடிப்படையில் யாழ்.பிரதேச செயலகத்தின் அனுசரணையில் பழைய மாணவர் சங்கத்தின் மேற்பார்வையில் விசேட அதிரடிப் படையினரால் தொற்று நீக்கும் பணிகள் நேற்று (28) இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதான வகுப்பறைக் கட்டடத் தொகுதி, ஆரம்பப் பிரிவு வகுப்பறைக் கட்டடத் தொகுதி, பிரதான மண்டபம், உள்ளக மைதானத் தொகுதி, வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள், விஞ்ஞான ஆய்வு கூடத் தொகுதிகள், பாடசாலை முன்றல் என்பன பூரணமாக தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

பாடசாலை சமூகத்தின் அழைப்பை ஏற்று எமது பாடசாலைக்கும் தொற்று நீக்கல் சேவையை வழங்கிய யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சனுக்கும் , தொற்று நீக்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப் படையினருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பிலும், முஸ்லிம் சமூகம் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக யாழ். ஒஸ்மானியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

{எஸ்.ரவி} 

Related posts

செலவினங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்

World News

மகளுடன் ஹெலிஹொப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபல விளையாட்டு வீரர்!

World News

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தா வாக்களித்தார்

World News