fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Elalai-Farmer
இலங்கைச் செய்திகள்

யாழ். ஏழாலையில் விற்பனைக்காக கட்டி வைத்திருந்த கறி மிளகாய்கள் திருட்டு

தனது விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த கறி மிளகாய்களைப் பிடுங்கி விற்பனை செய்வதற்காக வைத்து விட்டு அருகிலுள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த முதியவரின் 42 கிலோ கறிமிளகாய் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுப் பிற்பகல்(03) யாழ்.ஏழாலை கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தொழிலாளர்களின் கூலி அதிகரித்துள்ளமையால் முதுமையையும் பொருட்படுத்தாது மேற்படி முதியவரும், அவரது மனைவியும், மகளும் இணைந்து தங்கள் உடல் உழைப்பினைப் பயன்படுத்திக் கறிமிளகாய்களைப் பிடுங்கியுள்ளனர். இவ்வாறு பிடுங்கிய கறிமிளகாய்களை வெளியூர் வியாபாரியொருவருக்கு விற்பனை செய்வதற்காக அவற்றை உரப்பையொன்றில் போட்டுக் கட்டி வைத்திருந்த போதே இனம் தெரியாதவர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

யாழ். ஏழாலை மத்தியைச் சேர்ந்த கதிரவன் தங்கவடிவேல்(வயது-69) என்பவரின் கறிமிளகாயே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏழாலை கிழக்குப் பகுதியில் அண்மைக் காலமாக விவசாய நிலங்களில் மரக்கறித் திருட்டுக்கள் அதிகரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

Related posts

அம்பாறையில் கார்த்திகைத் தீபத் திருநாள் விமரிசை (Photos)

N N

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

N N

சிவாஜிலிங்கத்திற்கு உள்நுழைவு வீசாவை வழங்கியது இந்தியா

World News