fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Jaffna Urumpirai Parthenium
Uncategorised இலங்கைச் செய்திகள்

யாழ். உரும்பிராய் மேற்கில் பார்த்தீனியத்தின் பரம்பல் அதிகரிப்பு

யாழ். உரும்பிராய் மேற்கு பகுதியில் நச்சுச் செடிகளான பார்த்தீனியச் செடிகளின் பரம்பல் அதிகரித்துக் காணப்படுகின்றன. குறிப்பாக இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் ,வீதியோரங்கள்,குடிமனைகளைச் சூழவுள்ள பகுதிகளில் பார்த்தீனியம் பெரும் செடிகளாக வளர்ந்து காணப்படுகின்றன.

வரலாற்றுப் புகழ் மிக்க பிள்ளையார் ஆலயங்களில் ஒன்றான கருணாகரப் பிள்ளையார் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளிலேயே பார்த்தீனியத்தின் தாக்கத்தை அவதானிக்க முடிகிறது. இதனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பார்த்தீனியச் செடிகள் பற்றை போல் வளர்ந்து காணப்படுவதால் இதிலிருந்து நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மேற்படி பகுதி மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதேவேளை, தமது பயிர்ச் செய்கைக்கு பார்த்தீனியச் செடிகளின் பரம்பல் பாரிய அச்சுறுத்தலாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பார்த்தீனியத்தின் பரம்பல் அதிகரிப்பு

Related posts

க.பொ.த சாதாரண தர, உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

World News

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 219 ஆகியது!

TamilTwin

யாழ். போதனா வைத்தியசாலையில் நாளை கிளினிக் சேவை இடம்பெறாது!!

TamilTwin