fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ்.இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பெரும் பண மோசடி: தனியார் நிறுவன உரிமையாளர் கைது

இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணமோசடி செய்த நபரொருவரை யாழ்ப்பாணம் பெருங் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். வேம்படிச் சந்தியிலுள்ள பிரபல தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் யாழ்.வேம்படிச் சந்தியிலுள்ள வீடொன்றில் தனியார் ஆலோசனை நிறுவனமொன்றை நடாத்தி வருகிறார். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறிப் பலரிடம் பண மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் மோசடியால் பாதிக்கப்பட்ட நபரொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். நேற்றைய தினம்(02) மற்றொரு நபரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மேற்படி இரு முறைப்பாடுகளின் அடிப்படையிலும் மேற்படி தனியார் நிறுவன உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரைத் தடுப்புக் காவலில் வைத்துப் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

உயர்தரப் பரீட்சையில் சாதித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள்!! (Photo)

TamilTwin

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுடன் நிறைவு

SL News

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி

World News